எம்ஜிஆர் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர்.
முன்னதாக, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் இருந்து ஆற்றுப்பாலம், காந்திஜி சாலை வழியாக ரயிலடி வரை அதிமுகவினர் மெளன ஊர்வலம் சென்றனர். பின்னர், ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் பால்வளத் தலைவர் ஆர். காந்தி, அதிமுக பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ், ஒன்றியச் செயலர் துரை. வீரணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பெரிய தெரு வழியாக கும்பேசுவரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலர் ராம. ராமநாதன், ஒன்றியச் செயலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அமமுக சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், உச்சிபிள்ளையார் கோயில் எதிரே எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு நகரச் செயலர் குருமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா திராவிடர் கழகத்தினர் ஊர்வலமாகச் சென்று எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், அண்ணா திராவிடர் கழக அவைத் தலைவரும், மாவட்டச் செயலருமான மணலூர் சுந்தரராஜன் தலைமையில், நகரச் செயலர் மனோ கார்த்திகேசுவரன், ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில்.... மாவட்ட பொருளாளர் கே. கோபிநாதன் தலைமையில் பாபநாசம் மேலவீதியிலிருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் பாபநாசம் கீழவீதி, கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட விவசாய பிரிவு தலைவர்அண்ணாமலை, மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ். மோகன், முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டையில்... பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலிருந்து அதிமுகவினர் எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமையில், நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன் முன்னிலையில் ஊர்வலமாகச் சென்று பெரியகடை வீதி அண்ணா சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன், மாவட்ட முன்னாள் செயலர் இரா.கார்த்திகேயன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.மலையய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில்... பேருந்து நிலையம் பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்ற மெளன ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாஸ்கர் தலைமை வகித்தார். இதில், நகரச் செயலர் வி.எம்.பாண்டியராஜன், ஒன்றியச் செயலர் தம்பி.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வல முடிவில் அண்ணா சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேராவூரணியில்.... சேது சாலையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு, ஒன்றியச் செயலாளர் உ. துரைமாணிக்கம், மாநில கயிறு வாரிய தலைவர் நீலகண்டன், நகரச் செயலாளர் வி.என். பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில்... திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு திக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் குழ. அரங்கசாமி, நகர செயலாளர் மு.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் த.பெரியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமமுகவினர் அமைதி ஊர்வலம்... புதிய பேருந்து நிலையத்திலிருந்து கருப்புபட்டை அணிந்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தின் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ்.பாண்டியராஜன், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி ஆசைதம்பி, சேதுபாவாசத்திரம் அஸ்வினி எம். பார்திபன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்... தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக் கட்டடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ச. முத்துக்குமார், நிதி அலுவலர் இரா. முரளிதரன், துணைப் பதிவாளர் ஜி. பன்னீர்செல்வம், மலேசிய மாணவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.