நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் திங்கள்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அந்த ஆலையின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி, சுமூக தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.