முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலை முருகன் கோயிலில் ஜூலை 27 இல் பௌர்ணமி கிரிவலம்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 23 ஜூலை 2018, 8:40 am IST
பகிர்:

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
முருகனின் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இங்கு தமிழ் மாதந்தோறும் பெளர்ணமி கிரிவலத்தை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் 27 ஆம் மாலை நடைபெறுகிறது. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள வல்லப கணபதி சன்னதியிலிருந்து புறப்படும் பௌர்ணமி கிரிவலத்துக்கு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை விசாரணை சுவாமிநாத தம்பிரான் தலைமை வகிக்கவுள்ளார்.
அதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் இமயவன் வழிகாட்டுதலுடன்,  கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிரிவல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments