ரயிலில் அடிபட்ட ஆசிரியர் சாவு
தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை ரயிலில் அடிபட்ட பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை ரயிலில் அடிபட்ட பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
திருவையாறு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி (54). இவர் திருவையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனிடையே, திட்டை - தஞ்சாவூர் இடையே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தண்டவாளப் பகுதிக்குச் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அடிபட்டார். இதில், பலத்தக் காயமடைந்த ராஜமூர்த்தி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.