கும்பகோணத்தில் சலங்கை அணியும் விழா
கும்பகோணம் அபிநயா பரதநாட்டிய பள்ளி சார்பில் 7 மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அபிநயா பரதநாட்டிய பள்ளி சார்பில் 7 மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் பரதநாட்டியம் கற்றுக் கொண்ட மாணவிகள் எம். சன்மதி, எம். ஆர்த்தி, எம். மோனிகா, டி. ஹரிதா, வி. மௌத்திகா, எஸ். ரதிஸ்ரீ, ஆர். சம்யுக்தா ஆகியோருக்கு குரு வி. விஜயமாலதி சலங்கை அணிவித்தார்.
இதையடுத்து மாலை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் மாணவிகளை வாழ்த்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.