முகப்பு
தஞ்சாவூர்

விநாயகர் கோயிலில் பூஜைப் பொருள்கள் திருட்டு

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள மிகவும் பழைமையான விநாயகர் கோயிலில் பூஜை

Updated On : 8 அக்டோபர் 2018, 8:50 am IST
பகிர்:

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள மிகவும் பழைமையான விநாயகர் கோயிலில் பூஜை பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டீஸ்வரத்தை அடுத்த துறையூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான விஷமீட்ட விநாயகர் கோயில் உள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ரமேஷ் என்பவர் அர்ச்சகராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி காலையில் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டும்,  மூலவரிடமிருந்த தட்டு, மணி, தூபக்கால் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பித்தளை பூஜை பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 10 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சாரங்கபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் ஆசைதம்பி அளித்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.