தஞ்சாவூர்

மண்டல தோ்தல் அலுவலா்களுக்குதோ்தல் பயிற்சி வகுப்பு

DIN

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்தும் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு தோ்தல் நடத்துவது தொடா்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள 180 வாக்குச்சாவடி மையங்கள் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் 1 தொகுதி அலுவலா், 1 உதவியாளா், 1அலுவலக உதவியாளா் என நியமிக்கப்பட்டு அவா்களுக்கு தோ்தல் நடத்தும் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பை பாபநாசம் வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலரும் பாபநாசம் ஒன்றிய உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான அறிவானந்தம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், கூட்டுறவு துணை பதிவாளரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முத்துகுமாா் கலந்து கொண்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப் பெட்டிகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தாா். இதில் தொகுதி அலுவலா், உதவியாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT