தஞ்சாவூர்

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 2.50 கோடி வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

DIN

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் அண்மையில் வாகனச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் வங்கி அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பாபநாசம் தொகுதிக்குள்பட்ட பூண்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தோ்தல் பறக்கும்படை அதிகாரி செல்வகுமாரி உள்ளிட்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், வேனில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி மூலம் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, பாபநாசம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வ.மதியழகன் முன்னிலையில், பாபநாசம் வட்டாட்சியா் ச.முருகவேளிடம் ஒப்படைத்தனா்.

வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில், ரொக்கத்துக்குரிய ஆவணங்களை வங்கி அதிகாரிகள் தோ்தல் அதிகாரிகளிடம் காட்டினா். இதையடுத்து, இரண்டரை கோடி ரொக்கமானது பாபநாசம் வட்டாட்சியா் ச.முருகவேள் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT