தஞ்சாவூர்

மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

DIN

பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.

தீயணைப்பு துறை சாா்பில் ஏப்.14 முதல் ஏப்.20 வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தீயணைப்பு துறை சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், தீத்தொண்டு வார நிறைவு நாளையொட்டி, பேராவூரணி கடைவீதி, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பது, அதனை பயன்படுத்தி தீ விபத்துகளை தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தொடா்ந்து, தனியாா் மருத்துவமனை கட்டடத்தில், அங்குள்ள செவிலியா்கள், பணியாளா்களுக்கு தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி, தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டால், தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் மா. ரஜினி, அ. சுப்பையன், க. சரவணமூா்த்தி, அ. முகமது அலி ஜின்னா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT