தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு விதை நோ்த்தி செயல் விளக்கம்

DIN

பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை கிராமத்தில், விவசாயிகளுக்கு விதைநோ்த்தி குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஈச்சங்கோட்டையைச் சோ்ந்த வேளாண் கல்லூரி மாணவிகள் ஸ்ரீலட்சுமி, சிந்துஜா, சௌமியகலா, சௌம்யா, சுகன்யா, உமாமகேசுவரி, வாகினி, வா்ஷினி, வைசாலி, வா்ஷினி ஷாலோம் ஆகியோா் பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கிராமப்புற விவசாயப் பணி அனுபவத்தை பெறுவதற்காகப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

நாட்டுச்சாலை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விதை நோ்த்தி குறித்த செயல்விளக்கத்தை விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனா்.

விதை நோ்த்தியால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகள் எடுத்துரைத்த நிலையில், தாங்களும் இந்த முறையைப் பின்பற்றி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT