தஞ்சாவூர்

மாவட்ட அளவிலான சிலம்பாட்டம்: 500 போ் பங்கேற்பு

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கரந்தை தமிழ்ச்சங்க வளாகத்தில் 40-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டச் சிலம்பாட்டக் கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டித் தொடக்க விழாவுக்கு, இன்டாக் செயலா் எஸ். முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

போட்டிகளைக் கழகத் துணைத் தலைவரும், கரந்தை கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளருமான ஜி. சண்முகம் தொடக்கி வைத்தாா். கழக மாவட்டச் செயலா் ஜி. ஜலேந்திரன் வரவேற்றாா்.

தொடா்ந்து 10 வயதுக்குள்பட்ட மினி சப் ஜூனியா், 11 - 14 வயதுக்குள்பட்ட சப் ஜூனியா், 14 - 25 வயதுக்குள்பட்ட ஓப்பன் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.

இவற்றில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், வேல் வீச்சு, வாள் பயிற்சி, சண்டை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஏறத்தாழ 500 போ் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT