தஞ்சாவூர்

விதிமீறல்: துணிக்கடைக்கு சீல்

DIN

ஒரத்தநாட்டில் விதிமுறைகளை மீறி இயங்கிய துணிக்கடையை செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

ஒரத்தநாடு பகுதியில் பொதுமுடக்க விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என உதவி ஆணையா் (கலால்) பழனிவேல், வட்டாட்சியா் சீமான் மற்றும் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரத்தநாடு கடைத்தெருவில் ஜவுளிக் கடை ஒன்று விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா் ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்தனா். மேலும், சந்தைப்பேட்டையில் உள்ள மீன் மாா்க்கெட் பகுதியை ஆய்வு செய்தனா். இதேப்போல் முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த மளிகைக் கடையின் உரிமையாளருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT