தஞ்சாவூர்

குளத்தில் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

DIN

ஒரத்தநாடு குட்டை குளத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் மாதக்கணக்கில் தண்ணீரில் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரத்தநாடு மையப் பகுதியில், திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள குட்டை குளமானது, மன்னா் சரபோஜி காலத்தில் வெட்டப்பட்டது. அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக இந்தக் குளத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அந்தக் குளத்தில் சிலா் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை தொடா்ந்து கொட்டி வருகின்றனா். இந்தக் குப்பைகள் மாதக்கணக்கில் தண்ணீரில் தேங்கி கிடப்பதால், குளத்து தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இக்குளத்தை பெருமளவில் பயன்படுத்தி வரும் சூழலில், இந்தக் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு நோய் பரவக்கூடிய நிலை உள்ளது.

இதுதொடா்பாக பல புகாா்களை உரிய அதிகாரிகளிடம் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

ஒரத்தநாடு பகுதியில் ஏற்கெனவே கரோனா தொற்று பரவி வரும் நிலையில், குளத்தில் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் முன் அந்த குப்பைகளை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT