தஞ்சாவூர்

பாரதி இலக்கியப் பயிலக இயக்குநர் வெ. கோபாலன் காலமானார்

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வரலாற்று ஆய்வாளரும், பாரதி அன்பரும், பாரதி இலக்கியப் பயிலக இயக்குநருமான தஞ்சை வெ. கோபாலன் (85) மாரடைப்பால் வியாழக்கிழமை (மே 6) காலமானார்.
நாகை மாவட்டம், தில்லையாடியில் 1936 -ஆம் ஆண்டு பிறந்த இவர்,  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை எல்ஐசி காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்தார்.  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர், திருவையாறு பாரதி இயக்கத்தைச் சார்ந்த பாரதி இலக்கியப் பயிலக இயக்குநராக 2001 -ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று, திறம்படச் செயல்பட்டு வந்தார்.
இதன் மூலம், பாரதி கருத்துகளைப் பரப்பும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, பாரதி குறித்த அஞ்சல்வழிப் பாடத் திட்டத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பாரதி குறித்து அறிந்து கொள்ள பாடங்களை நடத்தி வந்தார். இளைஞர்களுக்கு பாரதி குறித்த பயிலரங்குகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வந்தார். பாரதி கலை, இலக்கியம், குறித்து பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடந்து எழுதி வந்தார். 
திருவையாறு வரலாறு, தஞ்சை மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், திருக்கோயில்களில் நாட்டியாஞ்சலி உள்பட 15 நூல்களை எழுதியுள்ளார். 
திருவையாறு நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவராகவும், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சம்மேளனத்தின் தஞ்சைக் கோட்டப் பொறுப்பாளராகவும், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும், தஞ்சை தியாக பிரம்ம சபாவின் துணைத் தலைவராகவும், திருவையாறு சாய்பாபா அறக்கட்டளை அறங்காவலராகவும், தஞ்சை காந்தி இயக்க அறக்கட்டளை அறங்காவலராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி 25 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவருக்கு இரு மகன்களும்,  மகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. தொடர்புக்கு : 94423-45469.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT