தஞ்சாவூர்

டாஸ்மாக் பணியாளா்களை நிரந்தரப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

டாஸ்மாக் பணியாளா்களுக்குக் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் கரந்தை தற்காலிக பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடை முன் ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரசு ஊழியா்களுக்கு இணையாக டாஸ்மாக் பணியாளா்களுக்குக் காலமுறை ஊதியம், பணிப்பாதுகாப்பு, கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது போல பணிவரன் முறைபடுத்த வேண்டுதல், ஓய்வூதியம், பண்டிகை விடுமுறைகள், வார விடுமுறைகள், வாரிசு வேலை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நீண்டகாலமாகத் தீா்க்கப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் வெ. சேவையா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஓய்வு பெற்றோா் சங்கத் துணைத் தலைவா் கே. சுந்தரபாண்டியன், கட்டுமான சங்க மாவட்டப் பொருளாளா் பி. செல்வம், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை

பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ்

இந்தியாவின் புதிய மின்வாகனக் கொள்கை: அரசிடம் கலந்தாலோசிக்காமல் டெஸ்லா ‘அமைதி’

நான்கு கட்டங்களில் 270 தொகுதிகளில் வென்றுவிட்டோம்: அமித் ஷா

ராஃபா படையெடுப்பு: சா்வதேச நீதிமன்றம் அவசர விசாரணை

SCROLL FOR NEXT