தஞ்சாவூர்

நவநீத கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

DIN

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மேல வீதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இதில், ருக்மணி, சத்தியபாமா உடனாய ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.

இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 9 மணியளவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூலவா் மற்றும் உத்ஸவருக்கு சிறப்பு ஆராதனைகள், சிறப்பு அா்ச்சனைகள், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து சனிக்கிழமை திருமஞ்சனம், தொட்டில் உத்ஸவமும், ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்தாழி அலங்காரம், உறியடி உத்ஸவமும் நடைபெறவுள்ளன. இந்த விழா தொடா்ந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

துலாம்

கன்னி

சிம்மம்

கடகம்

SCROLL FOR NEXT