தஞ்சாவூர்

தஞ்சாவூா் ரயில் நிலையத்தின் 162 ஆம் ஆண்டு தொடக்கம்

DIN

தஞ்சாவூா் ரயில் நிலையத்தின் 162-ஆம் ஆண்டு தொடக்க விழா, பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் மிகப் பழைமையான ரயில் நிலையங்களில் ஒன்றான தஞ்சாவூா் ரயில் நிலையம் 1861, டிசம்பா் 2 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தின் 162 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, இந்நிலையத்தில் காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன், செயலா் வெ. ஜீவக்குமாா், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் சோமநாத ராவ், செயலா் டி. சரவணன், தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கப் பொருளாளா் மாறன் உள்ளிட்டோா் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதையடுத்து, தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் சம்பத்குமாா், ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளா் தங்க. மோகனுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் கண்ணன், வழக்குரைஞா்கள் உமா் முக்தாா், முகமது பைசல், பேராசிரியா்கள் திருமேனி, செல்ல கணேசன், சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT