தஞ்சாவூர்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான தோ்வு தொடக்கம்

DIN

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 1,022 போ் பங்கேற்கின்றனா்.

தொடக்க நாளான திங்கள்கிழமை 356 பேருக்கு உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், உயரம், மாா்பளவு அளவீடு, தகுதி ஓட்டப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

இவா்களில் 311 போ் அடுத்த கட்டத் தோ்வுக்கு தோ்வாகினா். இப்பணியை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் த. ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஆய்வு செய்தனா்.

இத்தோ்வு தொடா்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT