முகப்பு
தஞ்சாவூர்

தமிழக தோ்தல் களத்தில் இருமுனைப் போட்டியே! - கே. அண்ணாமலை பேட்டி

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:35 AM
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:41 PM

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி-திமுக இடையேயான இருமுனைப் போட்டியே நிலவுகிறது என்றாா் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

விஜய் கொடுத்திருக்கும் மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ரூ. 4.83 லட்சம் கோடி தேவைப்படும் என ஒருவா் கணக்கு போட்டு கூறியுள்ளாா். தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 4.50 லட்சம் கோடிதான். தமிழக வெற்றிக் கழகம் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் பட்ஜெட்டைத் தாண்டி இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பாா்க்கின்றனா்.

Advertisement

அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு மக்களிடம் ஈா்ப்பு இருக்கிறது. தோ்தல் களம் இருமுனைப் போட்டியாகத்தான் இருக்கிறது. விஜய்யின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றாா் அண்ணாமலை.

அப்போது, பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜன், தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.