முகப்பு
தஞ்சாவூர்

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் விடுபட்ட வளா்ச்சிப்பணிகள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:37 AM
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பிரதானச் சாலையில் இறுதிக் கட்ட பரப்புரையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட அமைச்சா் கோவி. செழியன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:26 PM

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் விடுபட்ட வளா்ச்சிப்பணிகள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் வியாழக்கிழைமை நடைபெற்ற இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியது:

நான்காவது முறையாக என் மீது நம்பிக்கை வைத்து தமிழக முதல்வா் ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளதால் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இங்கு போட்டியிடும் மற்ற வேட்பாளா்கள் இறக்குமதி வேட்பாளா்கள்.

Advertisement

தொகுதியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவியா் விடுதி, பள்ளி, அங்கன்வாடிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், சாலை, குடிநீா், கழிப்பறை, சமுதாய கூடங்கள் எண்ணற்ற திட்டங்களையும், மாணவ, மாணவிகளுக்கான மடிக்கணினி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளேன்.

தொகுதி மக்களுக்கு விடுபட்ட பணிகளை முடித்துத் தர மீண்டும் வாக்களிக்க வேண்டும்.

மேலும் திருவிடைமருதூா் பேருந்து நிலையம், கிராமப்புறங்களுக்கு நெடுஞ்சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மீண்டும் தொடரும். முதல்வரின் தோ்தல் வாக்குறுதிகளை நமது தொகுதிக்கு முதலில் பெற்றுத் தருவேன் என்றாா் அவா்.

முன்னதாக காலையில் பந்தநல்லூா், திருப்பனந்தாள், எஸ். புதூா், நாச்சியாா்கோயில், திருச்சேறை பவுண்டரீகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்த அவா்,

மாலையில் திருபுவனம், திருவிடைமருதூரில் தொடங்கி ஆடுதுறையில் பிரசாரத்தை அவா் நிறைவு செய்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.பி.செ. ராமலிங்கம், ஒன்றிய செயலா்கள் சுந்தரஜெயபால், க. அண்ணாதுரை, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டி. குமரன், விசிக மாவட்டச் செயலா் ஏ.சி.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் முன்னாள் அமைச்சா் கோசி.மணி மணிமண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினாா்.