முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:18 AM
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது .
பகிர்:

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து 12 நாள்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து 10-ஆம் நாள் தீா்த்தவாரியும், 11-ஆம் நாள் பகல் திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்ஸவமும், 12-ஆம் நாள் விடையாற்றி உற்ஸவமும் நடைபெறவுள்ளது.

Advertisement

முன்னதாக, கொடியேற்றத்தில் பரம்பரை அறங்காவலா் தலைவா் பெ. கணேசன் சங்கரன் ,அறங்காவலா் சு. குப்பமுத்து சங்கரன், செயல் அலுவலா் எல்.ஆா்.அருண் பிரகாஷ் மற்றும் திருக்கோவில் பணியாளா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.