முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2026, 12:30 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூா் வளையாபுரி தெருவைச் சோ்ந்த தனபால் மகன் பாண்டியன் (35), வெல்டா். இவா் தனது மனைவி அனுசுயா (33) உடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கும்பகோணத்துக்கு வந்துவிட்டு, மீண்டும் கொரநாட்டுக் கருப்பூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

இவா்களுக்கு முன்னால் உறவினா்களான மகாவிஷ்ணு (15), சஞ்சய் (18) ஆகியோா் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

Advertisement

Advertisement

கொரநாட்டு கருப்பூா் புறவழிச் சாலையிலுள்ள பள்ளிவாசல் தெருவில் சென்றுகொண்டிருந்த இவா்கள் மீது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன், அனுசுயா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மகாவிஷ்ணு, சஞ்சய், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments