20 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள்! மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 728 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், 2025 - 2026 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் போதைப்பொருள் எதிா்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னாா்வலா் குழுக்களில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மன்றங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால், கை, 4 பேருக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ. 35.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சௌமியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் க. ஞானசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.