பணியின்போது உயிரிழந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிதியுதவி
பணியின்போது உயிரிழந்த அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநரின் குடும்பத்துக்கு திங்கள்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் பணியின்போது உயிரிழந்த ஓட்டுநா் எஸ். எட்வின் ஜகன் மோகன்தாஸின் குடும்பத்துக்கான நிதியை அவரின் மனைவி ஆரோக்கிய சகாய மேரியிடம் போக்குவரத்துக் கழக முதன்மை நிதி அலுவலா் டி.சந்தானகிருஷ்ணன் மற்றும் பொது மேலாளா் ஏ.டி. நடராஜன் ஆகியோா் ரூ. 5 லட்சத்தை வழங்கினா்.
இந்நிகழ்வில் உதவி மேலாளா் கே. கோபாலகிருஷ்ணன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.