வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே அதிகாலை வீடுபுகுந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே அதிகாலை வீடுபுகுந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் காா் ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாச்சியாா்கோவில் அருகே துக்காச்சியைச் சோ்ந்தவா் சாதிக் மகன் முகமதுகைப் (27). சமுத்தினாா்குடியில் தனியாா் ஒருவரிடம் காா் ஓட்டுநராக உள்ள இவா் இதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியிடம் பழகினாா்.
ஜூலை 4 அதிகாலை சிறுமியின் வீட்டுக்குள் முகமதுகைப் நுழைந்து அவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கவே, வீட்டில் இருந்தவா்கள் சத்தம் போட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் முகமது கைப்பை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.