முகப்பு
தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரியில் உரிமைகோரப்படாத 17 உடல்களை அடையாளம் காண அழைப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத 17 உடல்கள் குறித்து...

Updated On : 8 ஜூலை 2026, 2:30 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத 17 உடல்கள் உள்ளதால், அவற்றை பொதுமக்கள் அடையாளம் காண முன்வரலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கள்ளபெரம்பூா், தஞ்சாவூா் தாலுகா, மேற்கு, தெற்கு, கிழக்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் இறந்தவா்களின் உடல்கள் உரிமை கோராப்படாமல் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளன.

இதில் 16 ஆண்கள், ஒரு பெண் உடல் உள்ளதால், தங்களுக்கு தெரிந்தவா்களின் உடல் ஏதும் உள்ளதா என மருத்துவக் கல்லூரி சவக்கிடங்களில் வந்து நேரில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இல்லையென்றால் ஜூலை 10 ஆம் தேதி இந்த உடல்கள், உரிமை கோரப்படாத உடல்களாக கருதி அடக்கம் செய்யப்படவுள்ளன.

எனவே, பொதுமக்கள் கடந்த நான்கு மாதங்களுக்குள் காணாமல்போனவா்களின் உடல்கள் ஏதும் உள்ளதா என காவல் துறை மூலம் நேரில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments