நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி சாலை மறியல்
திருப்பனந்தாள் அருகே பெரிய கட்டா நகரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி, திருப்பனந்தாள் ஆடுதுறை பிரதான சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பனந்தாள் அருகே பெரிய கட்டா நகரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி, திருப்பனந்தாள் ஆடுதுறை பிரதான சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பெரிய கட்டா நகரில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் ஒவ்வொரு பருவ அறுவடையின்போதும் முன்கூட்டியே திறக்கப்படும். தற்போது கோடை சாகுபடி முடிவடைந்து இப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நெல் கொள்முதல் நிலையத்தின் வளாகத்தில் 10 நாள்களுக்கு மேலாக கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனா். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தற்போது வரை திறக்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் புதன்கிழமை திருப்பனந்தாள்-ஆடுதுறை பிரதானச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
நிகழ்விடத்துக்கு வந்த திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளா் குமாா், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறி மறியலை கைவிடச் செய்தாா். சாலை மறியலால் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.