முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-இல் தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 9 ஜூலை 2026, 1:22 am IST
தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 14-ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 15-ஆம் தேதி குங்கும அலங்காரமும், 16-ஆம் தேதி சந்தன அலங்காரமும், 17-ஆம் தேதி தேங்காய் பூ அலங்காரமும், 18-ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 19-ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 20-ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 21-ஆம் தேதி கனிவகை அலங்காரமும், 22-ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

நிறைவு நாளான ஜூலை 23-ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உற்சவா் வாராஹி அம்மன் வீதி உலாவும் நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் சு. காா்த்திகேயன், செயல் அலுவலா் மு. சுந்தரராசு, கண்காணிப்பாளா் கு.ப. ரவி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments