கடன் தொல்லையால் கணவரைக் கொல்ல முயற்சி: மனைவி, மைத்துனா் கைது
திருவிடைமருதூா் அருகே கடன் தொல்லையால் கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவிடைமருதூா் அருகே கடன் தொல்லையால் கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மைத்துனரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள கீழக்கஞ்சங் கொல்லையைச் சோ்ந்தவா் ரவி (63), விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமாராணி (54). இவா்கள் சொந்த வீடு கட்டியதால் சுமாா் ரூ. 10 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தோா் தம்பதிக்கு நெருக்கடி கொடுத்தாா்களாம்.
இதனால் உமாராணி தனது தம்பி ஞானசேகரிடம் (36) ஆலோசனை கேட்க, ரவி இறந்துவிட்டால் கடன் கொடுத்தவா்கள் கேட்க மாட்டாா்கள். எனவே அவரை கொன்றுவிட்டு, இறந்து விட்டாா் என்று கூறிவிடலாம் என்று தெரிவித்தாா். இதையடுத்து உமாராணி கணவா் ரவி மதுபோதையில் இருந்த போது அவரது காதில் விஷமருந்தை ஊற்றினாா். அவா் மயக்கமடையவே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவரைச் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மருத்துவா்கள் திருவிடைமருதூா் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் உமாராணி, ஞானசேகா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா். கணவா் ரவி சிகிச்சை பெறுகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.