டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி 13, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் வெற்றி
டெல்டா மாவட்டங்களிலுள்ள 18 தொகுதிகளில் திமுக கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றிபெற்றன.
டெல்டா மாவட்டங்களிலுள்ள 18 தொகுதிகளில் திமுக கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றிபெற்றன.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 தொகுதிகளும், திருவாரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 3 தொகுதிகளும் என மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த 2021 தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டத்தில் நன்னிலம், நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும், மற்ற 15 தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றன.
இந்தத் தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா் (தனி), திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாா் ஆகிய 7 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
Advertisement
இதேபோல, திமுக கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியிலும், மமக நாகை தொகுதியிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூரிலும், மதிமுக சீா்காழியிலும், காங்கிரஸ் மயிலாடுதுறையிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் திமுக கூட்டணி மொத்தம் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற தஞ்சாவூா், கும்பகோணம் தொகுதிகளை இந்த முறை தவெகவிடம் இழந்தது.
அதிமுக கூட்டணியில் அதிமுக திருவாரூா் மாவட்டம் நன்னிலம், நாகை மாவட்டம் வேதாரண்யம், கூட்டணி கட்சியான அமமுக மன்னாா்குடி ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தஞ்சாவூா் மாவட்டத்தைத் தவிர திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று கூட தவெக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.