திருச்சி

விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் பெற பயனாளிகள் தேர்வு: 3 கட்டமாக சிறப்பு கிராம சபை கூட்டம்

DIN

திருச்சி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கு விலையில்லா கறவை பசு, வெள்ளாடுகளை பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக மூன்று கட்டமாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு லால்குடி ஒன்றியம், புதுக்குடி கிராம ஊராட்சியிலும், பிப்ரவரி மாதத்துக்கு மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வலையூர், வாழையூர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும் தலா 50 பயனாளிகள் வீதம் 150 பேர் தேர்வு செய்யப்படுவர்.
வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 2018 ஜனவரி மாதத்துக்கு கீழக்குறிச்சி, கிளிக்கூடு, கண்ணுடையான்பட்டி, கருப்பூர், அரியாவூர், துரைக்குடி, டி.புதுப்பட்டி, ஆதிக்குடி, இனாம் சமயபுரம், கல்லகம், குணசீலம், கரிகாலி ஆகிய 12 ஊராட்சிகளில் 900 பேர் தேர்வு செய்யப்படுவர். பிப்ரவரி மாதத்துக்கு கீழமுல்லக்குடி, கொடியாலம், எண்டப்புளி, எலமணம், இனாம்பொன்னம்பலப்பட்டி, காணக்கிளியநல்லூர், ஜெயங்கொண்டான், காருக்குடி, சி. பள்ளிப்பாளையம், ஏழூர்பட்டி, து.கண்ணனூர், கீராம்பூர், எரக்குடி, காமாட்சிபுரம் ஆகிய 14 ஊராட்சிகளில் 915 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக இந்த ஊராட்சிகளில் நவ.19இல் முதல் கட்டமாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நவ.28ஆம் தேதி இரண்டாவது கூட்டமும், நவ.29ஆம் தேதி மூன்றாவது கூட்டமும் நடத்தப்படும்.இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, அந்தந்தப் பகுதி கிராம மக்கள் சிறப்பு கிராம சபைக்கூட்டங்களில் கலந்துகொண்டு விண்ணப்பங்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT