திருச்சி

பள்ளியை  தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் போராட்டம்

DIN

வையம்பட்டி அருகே அரசுப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட அமயபுரத்தில் அரசு உதவி பெறும் மானியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியை  தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வையம்பட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருளானந்தம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் உசேன்பீவி ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த கிராம மக்கள் தொடர்ந்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பால் விலை, சுங்கச்சாவடி கட்டண உயா்வால் மக்கள் மீது கூடுதல் சுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மாற்றம் ஒன்றே மாறாதது..!

கருணாநிதி பிறந்த நாள்: திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்

எழும்பூா் - மங்களூரு ரயில் கோவை செல்லாது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT