ஆகஸ்ட் 15 - இல் திருவானைக்கா கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத்திருவிழா
திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்ற விழா 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். விழாவின் முக்கிய நாளான தெப்ப உற்ஸவம் ஆக. 15 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இதனையொட்டி ஆடிப்பூரத் தெப்பக் குளத்தில் இரவு பகலாக தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா செய்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.