திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே மின்சாரத் துறையில் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே மின்சாரத் துறையில் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூன் 25) குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக மின் துறை அமைச்சர், வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன் 25) வெளியிட்டார்.
இந்த அறிக்கையில் தமிழக மின்துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது, மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் திமுக ஆட்சியில் மின் துறையில் நடந்த பணிநியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வருவாய் பெருக்கம் குறித்து நிர்மல் குமார் குறிப்பிட்டிருந்தார்.
அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''2001 ஆம் ஆண்டு முதலான மின்வாரியத்தின் செயல்பாடுகள் வெள்ளை அறிக்கையில் உள்ளன.
தமிழகத்தின் மின் தேவை 21,307 மெகாவாட்டாக உள்ளது. மின் துறையில் வருவாயை விட செலவு அதிகரித்துள்ளது.
2001 முதல் 2006 வரை ரூ. 59,084 கோடி வருவாய், ரூ. 67,439 கோடி செலவு; பற்றாக்குறை ரூ. 8,355 கோடியாக உள்ளது.
மின்சாரத் துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். பணி உயர்வு நடக்கும்.
ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும் மக்களுக்கு எந்தவித குறைவின்றி செயல்பட்டு வருகிறோம்.
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 343 பேர் பட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த 25 ஆண்டுகளில் உரிய நடவடிக்கை இல்லை.
2001 - 2006 ஆம் ஆண்டில் 425 பேர், 2006 - 2011 வரையிலான ஆண்டில் 6740 பேர், 2011 - 2016 வரையில் 9729 பேர், 2016 - 2021 வரை 9613 பேர், 2021 - 2026 வரை 343 பேர் மின்சாரத் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொள்முதல் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்தி இருக்கின்றனர். இதனால் வளர்ச்சி இல்லை.
2021 முதல் உப்பூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்ந்து கிடப்பில் இருக்கிறது.
இனி கட்சி நிதி இல்லாமல் பணி நியமனம் செய்யப்படும். வேலைக்கு பணம் கொடுத்தோர் புகார் அளிக்கலாம். பணி நியமனம் குறித்த அறிவிப்புகள் இனி முறையாக வெளியிடப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
Only 343 people were appointed to the Electricity Department during the DMK regime Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.