முகப்பு
தமிழ்நாடு

அதிக மின் பயன்பாடே மின்வெட்டுக்கு காரணம் : அமைச்சர் நிர்மல் குமார்

குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை என நிர்மல் குமார் தெரிவித்துள்ளது குறித்து...

செய்தியாளர் சந்திப்பில் ஆர். நிர்மல் குமார் - எக்ஸ்
பகிர்:

அதிகப்படியான மின் பயன்பாடே மின்வெட்டுக்கு காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (மே 25) தெரிவித்தார்.

கட்சி தலைமை மீதான அதிருப்தியால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாகவும், குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் ஆர். நிர்மல் குமார் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் இன்று 14.22 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு ரூ. 2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதே தவெக அரசின் நிலைப்பாடு. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

மின்சாரத் துறை முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் மின்கம்பம் உள்ளிட்டவற்றில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. சிலர் மட்டுமே பயன்பெறும் வகையில் கடந்த காலங்களில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த முறை மாற்றியமைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும். அதிகப்படியான மின் பயன்பாடே மின்வெட்டுக்கு காரணமாக உள்ளது.

கோவை சிறுமி கொலை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கவும், தேவையற்ற டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி தலைமை மீதான அதிருப்தியால் அதிமுக உறுப்பினர்கள் ராஜிநாமா செய்கின்றனர். குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை. அவர்கள் ராஜிநாமா செய்து கட்சியில் இணைவதை யாராலும் தடுக்க முடியாது என நிர்மல் குமார் பேசினார்.

summary

Excessive Power Consumption is the Cause of Power Cuts Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.