மகளிருக்கு ரூ. 2,500 எப்போது? தேவையெனில் விஜய், செய்தியாளர்களைச் சந்திப்பார்! சிடிஆர் நிர்மல் குமார்
மகளிர் உரிமைத் தொகை பற்றி தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி
மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவது பற்றி பட்ஜெட்டுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவது பற்றி முடிவு செய்யப்படும். அதற்கான நிதி ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஓர் உத்தரவில் அதனை செயல்படுத்திவிட முடியாது. அது உங்களுக்கே தெரியும். நிதி நிலைமைகளை ஆய்வு செய்துவிட்டு பின்னரே முடிவு எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. துறைகள் பற்றி முதல்வரே முடிவு செய்வார். தினமும் என்னென்ன வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என அரசு சார்பில் செய்தி அறிக்கைகள் வெளியிடப்படுகிறது.
தேவைப்படும்போது செய்தியாளர்களைச் சந்திப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பு கட்டாயம் என்பது இல்லை. அனைத்து வேலைகளும் வெளிப்படையாகவே நடக்கும்" என்று கூறியுள்ளார்.
முந்தைய திமுக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
When will women receive the Rs 2,500 assistance: CTR Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.