திருச்சி-சென்னை இடையே ஏர் அலையன்ஸ் விமான சேவை தொடக்கம்
திருச்சி-சென்னை இடையே சனிக்கிழமை மட்டும் கூடுதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது ஏர் அலையன்ஸ் விமான நிறுவனம்.
திருச்சி-சென்னை இடையே சனிக்கிழமை மட்டும் கூடுதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது ஏர் அலையன்ஸ் விமான நிறுவனம்.
திருச்சி - சென்னை இடையே, ஏர் அலையன்ஸ், ஜெட், இண்டிகோ என மொத்தம் 3 விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. இதில், ஏர் அலையன்ஸ் தினசரி ஒரு சேவையும், ஜெட் இரு சேவைகளையும், இண்டிகோ 4 சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர் அலையன்ஸ் நிறுவனம் சனிக்கிழமை மட்டும் கூடுதலாக ஒரு சேவையை தொடங்க திட்டமிட்டு சனிக்கிழமை (ஜூலை 21) முதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரவு 7.45க்கு திருச்சி வரும் ஏர் அலையன்ஸ் விமானம் 8.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 9.25க்கு சென்னையை சென்றடைகிறது. முன்னதாக தினசரி காலை 8.15-க்கு திருச்சி வரும் விமானம் 8.40-க்கு சென்னையை சென்றடைகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.