திருச்சி

மணல் விலையை ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்

DIN

லால்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மாட்டுவண்டிகளில் எடுக்கப்படும் மணல் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே மாதவப்பெருமாள் ஊராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மட்டும் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து 1,200க்கும் அதிகமான வண்டிகளில் தினந்தோறும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கென மாட்டு வண்டிக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த மணல் வீடுகட்டுவோரிடம் 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தால் ரூ.3 ஆயிரம் எனவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரூ.5 ஆயிரம், 10 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
கூடுதல் விலை காரணமாக கட்டுமான செலவு அதிகமாகி இருப்பதால் வீடு கட்டுவோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். பொதுப்பணித்துறையிடமிருந்து குறைவான விலைக்கு பெற்று மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மணல் விலையை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகி இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT