திருச்சி

மணப்பாறையில் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலி

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டர் சிறப்புத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மணப்பாறை நகரின் மத்தியில் மிக பழைமை வாய்ந்த  புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. 
இங்கு, இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் தினத்தையொட்டி சனிக்கிழமை நள்ளிரவு மணப்பாறை மறைவட்ட பங்குதந்தை ஆரோக்கிய சுந்தர்ராஜ், திருச்சி மறைமாவட்ட பட்டியல் வகுப்பு பணிக்குழு செயலர் அந்துவான் ஆகியோர் தலைமையில் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 
12.30 மணியளவில் இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததாக இயேசுவின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டது.  இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியினை கிறிஸ்துவ பொதுமக்கள் பங்குபெற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT