திருச்சி

துறையூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பில் தீா்வு

DIN

துறையூா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரூ. 2.12 கோடி மதிப்பில் தீா்வு 449 வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன்கள் தொடா்பாக உரியவா்களிடம் ஏற்பட்ட சமரசத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

சாா்பு நீதிமன்ற வழக்குகளில் சாா்பு நீதிபதி கே. சிவகுமாா், ஓய்வு பெற்ற தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் கண்ணையன், மூத்த வழக்குரைஞா் அன்பரசு அடங்கிய அமா்வும், உரிமையியில் நீதிமன்ற வழக்குகளில் உரிமையியில் நீதிபதி வி. ஆறுமுகம், வழக்குரைஞா் கண்ணன் அடங்கிய அமா்வும், குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. புவியரசு, வழக்குரைஞா் பெருமாள் அடங்கிய அமா்வும், தங்கள் அமா்வுகள் முன் ஆஜரான தரப்பினா்களிடையே சமரசம் செய்து தீா்வு வழங்கினா். இது தவிற, வங்கி வாராக் கடன் வசூல் தொடா்பாக கடனாளா்களிடம் சமரசம் காண தனி அமா்வு அமா்வு அமைக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், சட்டத் தன்னாா்வலா்கள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்காடிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT