வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்றும் இதர திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்றும் இதர திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம் பணிகளை ஆட்சியர் சு. சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப் பள்ளி, கல்லுக்குழி நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்ட ஆட்சியர், முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டு
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேர்தல் ஆணைய உத்தரவு வரும் வகையில் துணை பட்டியலில் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை அந்தந்தப் பகுதி தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் வழங்கலாம் என்றார் ஆட்சியர்.