திருச்சி

விடுமுறை நாள்களிலும் வரிகள் செலுத்தலாம்: ஆணையர் அறிவிப்பு

DIN

திருச்சி மாநகராட்சியின் வரி வசூல் சேவை மையங்களில் அனைத்து விடுமுறை நாள்களிலும் வரிகளுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு வரி செலுத்துபவர்கள் அனைவரும் சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில்வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை, புதைவடிகால் சேவைக்கட்டணம் ஆகியவைகளின் நிலுவை மற்றும் நடப்புக் கட்டணத்தை செலுத்த தீவிர வரிவசூல் முகாம் நடத்தப்பட்டது.
 2018-19ஆம் ஆண்டுக்கான வரியினங்களை செலுத்த மாநகராட்சியில் உள்ள 27 வசூல் மையங்களில் காலை 9 மணிமுதல் 5 மணிவரை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்,  இணையதளம் மூலமும் வரிகளை செலுத்தலாம். விடுமுறை நாள்களிலும் கட்டணம் செலுத்துவதற்கு எதுவாக அனைத்து வசூல் மையங்களும் விடுமுறை நாளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT