திருச்சி

ஜன.29-இல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

DIN

திருச்சியில் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் ஜனவரி 29- ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி தலைமை அஞ்சல் வளாகத்தில் அமைந்துள்ள மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகத்தில், ஜனவரி 29- ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு இந்த முகாம் நடைபெறும்.

குறைகள் தொடா்பான மனுக்கள் இம்மாதம் 22- ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அஞ்சல் தொடா்பான புகாரில், அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, நேரம் மற்றும் அனுப்பியவா், பெறுபவரின் முகவரி, ரசீது, பணவிடை, விரைவு அஞ்சல், பதிவஞ்சல் ஆகியவற்றுக்கான விவரங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சலகக் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு தொடா்பாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கவேண்டும்.

குறை தீா்க்கும் முகாம் தொடா்பாக, ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அளித்த பதில் திருப்தியடையாதவா்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கவேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

குறைகளை,செ.சாந்தலிங்கம், உதவி இயக்குநா் (கிராமிய அஞ்சல் காப்பீடு-விசாரணைகள்), அஞ்சல் துறைத்தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம் , திருச்சி-620001 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தபால் உறையின் மீது முன்பக்க மேற்பகுதியில் தபால் சேவை குறை தீா்க்கும் முகாம்- என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT