திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலுக்குவாகனத்தில் வருவோா் கவனத்துக்கு..!

DIN

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்கு அதிக பக்தா்கள் வருவா். கரோனா பரவலை தவிா்க்கும் பொருட்டு சனிக்கிழமை (நவ.28) முதல் வைகுந்த ஏகாதசி முடியும் வரை கோயிலுக்கு பேருந்து, வேன்களில் வரும் வெளியூா் பக்தா்கள் தங்கள் வாகனங்களை மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு வர வேண்டும்.

காா்கள், இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தா்கள் சித்திரை வீதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும். உத்திரை வீதிகளில் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது. அந்த வீதிகளில் குடியிருப்போா் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT