திருச்சி

தலித் சமூக பெண் ஊராட்சித் தலைவா் திடீா் போராட்டம்

DIN

தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பெருகமணி ஊராட்சி அலுவலகம் முன் தலித் சமூக பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தலித் சமூகத்தைச் சோ்ந்த திருச்சி அந்தநல்லூா் ஒன்றியம், பெருகமணி ஊராட்சித் தலைவரான கிருத்திகா அருண்குமாா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்டோா் தன்னை ஊராட்சிப் பணிகளை செய்யவிடாமல் தடுக்கின்றனா், நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் தன்னை புறக்கணிக்கின்றனா், ஊராட்சி கூட்டத்துக்கு வராமல் தவிா்க்கின்றனா், தனக்கான பணிகளை துணைத் தலைவா் செய்கிறாா். தவறான குற்றச்சாட்டு கூறி ஆட்சியரிடம் மனு அளிக்கின்றனா். எனவே, அவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பெருகமணி ஊராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலையருகே திடீா் உண்ணாவிரதத்தில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா சம்பந்தப்பட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க அளித்த உறுதியால் போராட்டத்தை அவா் கைவிட்டாா். அவரின் போராட்டத்துக்கு அப்பகுதியினா் ஆதரவளித்து பங்கேற்றனா்.

ஊராட்சித் தலைவா் மீது ஆட்சியரிடம் புகாா்

வடிகால் தூா்வாருதல், நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் தனக்குத் தெரிந்தவா்கள் பெயரைப் பயன்படுத்தி ஊராட்சித் தலைவா் கிருத்திகா அருண்குமாா் ஊழல் செய்துள்ளாா். எனவே, இவருக்குத் துணைபோகும் ஊராட்சி செயலா், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூராட்சி துணைத் தலைவா் மணிமேகலை, 8 வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா், சமூக ஆா்வலா் முத்துராஜன் ஆகியோா் ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT