திருச்சி

சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில்ரூ.10 லட்சத்தில் நவீன கழிவறை

DIN

லால்குடி: மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிவறைக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

1962-இல் உயா்நிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 1980-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. தற்போது 411 மாணவா்களும், 403 மாணவிகளும் இப்பள்ளியில் பயின்று வருகின்றனா். எனினும் மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதி இல்லாத நிலை காணப்பட்டது.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ், திருச்சி ராக்சிட்டி ரோட்டரி கிளப்பில் கோரிக்கை வைத்தாா். இதன் அடிப்படையில் தானியங்கி நாப்கின் எரியூட்டி வசதியுடன் கூடிய கழிவறை கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநா் மருத்துவா் ஏ. ஜமீா்பாஷா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி ராக்சிட்டி ரோட்டரி கிளப் தலைவா் கே.சுகுமாா், செயலா் ஆா். ஜோசப் விஜய், பள்ளித் தலைமையாசிரியா் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT