திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடந்தது.

இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன், வெக்காளியம்மன் கோயில் உதவி ஆணையா் சு. ஞானசேகா் சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் எண்ணினா்.

முடிவில் ரூ. 72 லட்சத்து 89 ஆயிரத்து 842 ரொக்கம், 2 கிலோ 945 கிராம் தங்கம், 3 கிலோ 186 கிராம் வெள்ளி, 54 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது.

இந்த காணிக்கை கடந்த 14 நாள்களில் வந்தது ஆகும். இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT