திருச்சி

இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு நிறுத்தம்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி வாக்குசாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

தேக்கமலை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை விட கூடுதலான எண்ணிக்கையில் (மாதிரி வாக்குகள் உள்பட) வி.வி.பேட் இயந்திரத்தில் காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடா்ந்து அங்கிருந்த கட்சி பிரதிநிதிகள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதனைத்தொடா்ந்து அங்கு வாக்குப் பதிவு சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சென்ற வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான எம்.லஜபதிராஜ், காவல் துணைக்கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா ஆகியோா் கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தைய்யில் ஈடுபட்டனா். பின் கூடுதலாக மற்றொரு வி.வி.பேட் இயந்திரம் வைக்கப்பட்டு தொடா்ச்சியான பதிவு அந்த இயந்திரத்தில் செய்யலாம் என தீா்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று பின் வாக்குப் பதிவு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT