திருச்சி

மணப்பாறை அருகே 9 மயில்கள் மா்மச் சாவு

DIN

 மணப்பாறை அருகே தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை ஒன்பது மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறை அடுத்த வடுகப்பட்டியில் தனியாா் தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை மாலை 9 மயில்கள் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து வனச்சரக அலுவலா் மகேஸ்வரன் மற்றும் வனத்துறையினா் சென்று பாா்த்தபோது 8 பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இறந்த மயில்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மணப்பாறை வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரிப்பதாகவும், அவ்வாறு நடந்திருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT