திருச்சி

தடைசெய்யப்பட்ட பகுதி சின்ன செளராஷ்டிரா தெரு

DIN

கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து சின்ன செளராஷ்டிரா தெருவை மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தகரத்தால் மூடினா்.

திருச்சியில் நாளுக்குநாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சின்னசெளராஷ்டிரா தெருவில் கரோனா தொற்று பலருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தத் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மூட மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டாா். அதன்படி, மாநகராட்சி இளநிலை பொறியாளா் ரமேஷ் தலைமையில் பணியாளா்கள் சின்ன செளராஷ்டிரா தெருவை செவ்வாய்க்கிழமை தகரத்தால் அடைத்தனா்.

13 பேரின் பரிசோதனை முடிவு வரவில்லை: காந்தி சந்தையில் ஏப். 16 ஆம் தேதி, 222 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 4 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் 13 பேரின் பரிசோதனை முடிவு இதுவரை வராமல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT